அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து வீரர் ஜேசன்ராய் சாதனை 180 ஓட்டங்கள் குவித்தார்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 180 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜேசன் ராய் பெற்றார்.
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்தது. முதலில் விளையாடிய அவுஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 119 பந்தில் 107 ஓட்டங்களும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), ஸ்டோனிஸ் 40 பந்தில் 60 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்கள் இலக்கை எடுத்தது. தொடக்க வீரர் ஜேசன்ராய் 180 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 151 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். ஜோரூட் 91 ஓட்டங்கள் எடுத்தார்.
180 ஒட்டங்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜேசன் ராய் பெற்றார்.
இதற்கு முன்பு அலெக்ஸ் ஹால்ஸ் 171 ஓட்டங்கள் குவித்ததை (பாகிஸ்தானுக்கு எதிராக, 2016) அவர் முறியடித்தார்.
No comments:
Post a Comment