*15 நாட்களுக்குள் 2 மாணவர்கள் பலி
*பாடசாலை அதிபர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க அரசு தீர்மானம்
2018 ஆம் ஆண்டு ஆரம்பமாகி இரு வாரங்கள் மாத்திரமே கடந்துள்ள நிலையில் மீண்டும் டெங்கு நோய் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 15 நாட்களுக்குள் இரு மாணவர்கள் அடங்கலாக மூவர் டெங்கின் கோரப்பிடியில் சிக்கி பலியாகியுள்ளதோடு சுமார் 1350 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டிருப்பதாக டெங்கு நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருட ஆரம்பத்தில் டெங்கு நோயாளர் தொகை கட்டுப் பாட்டிலே இருப்பதாக டெங்கு ஒழிப்பிற்காக தேசிய கட்டுப்பாட்டுப் பிரிவு மருத்துவர் பிரசீலா சமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலை வளாகங்களினூடாக டெங்கு பரவுவதை தடுக்க அதிபர்களுக்கு முழு மையாக அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.இருந்தும் மாணவர் களுக்கு டெங்கு பரவுவதை தடுக்க அதிபர்கள் முறையான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சுகாதார அதிகாரிகளின் உதவியுடனும் மாணவர்களுக்கு மத்தியில் டெங்கு பரவுவதை கட்டுப் படுத்தவும் பொது சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வளவு அதிகாரங்கள் வழங்கியும் பாடசாலையில் டெங்கு சூழல் காணப்பட்டு டெங்கினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களானால் அதற்கு அதிபர்களே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, டெங்கு பரவும் சூழலை வைத்துள்ள அதிபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அபராதம் அறவிட சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.அபராத தொகை அதிபரின் சொந்தப் பணத் தில் இருந்து பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஏறாவூரிலும், கொழும்பிலும் இரு மாணவர்கள் டெங்கினால் உயிரிழந்துள் ளனர். ஏறாவூரில் 7 ஆவது வகுப்பில் கற்ற முஆத் எனும் மாணவனும் கொழும்பு மகளிர் கல்லூரியில் 6 ஆம் வகுப்பில் கற்ற எஷா ஸ்பெல்ட்வைன்டும் கடந்த இரு தினங்களில் உயிரிழந் தார்கள் இது தவிர வவுனியாவில் மற்றொருவர் கடந்த வாரம் இறந்ததாக டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டது.
டெங்கு ஒழிப்பு மீண்டும்
டெங்கு அபாயம் உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கல்முனை பகுதிகளில் எதிர்வரும் 17 முதல் 19 வரை டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இருவாரங்களில் கொழும்பில் 400 பேரும் கம்பஹாவில் 260 பேரும் குருநாகலில் 200 பேரும் கண்டியில் 200 பேரும் மட்டக்களப்பில் 170 பேரும் நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். புது வருடத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பாடசாலைகளில் டெங்கு பரவும் இடங்களை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இரு தினங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை நாடுமாறும் உரிய சிகிச்சை முன்னெடுப்பது தாமதமானதாலேயே இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
கடந்த வருடம் டெங்கு நோயினால் 427 பேர் உயிரிழந்துள்ளதோடு 76 661 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டார்கள். இடைக்கிடை மழை பெய்து வரும் நிலையில் மீண்டும் டெங்கு நோய் தலைதூக்கி வருவதால் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தமது சூழலில் டெங்கு பரவும் இடங்களை சுத்தம் செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment