பண்டிகை கால பாதுகாப்பு கடமையில் நான்காயிரத்து முன்னூறு பொலிஸார் - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

24 December, 2017

பண்டிகை கால பாதுகாப்பு கடமையில் நான்காயிரத்து முன்னூறு பொலிஸார்

Image result for பொலிஸார் கடமையில்
பண்டிகைக் கால பாதுகாப்பு கடமையில் நான்காயிரத்து முன்னூறு பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீருடை தரித்த நிலையில் இரண்டாயிரத்து எண்ணுறு பொலிஸாரும், சீருடை தரிக்காத நிலையில் முன்னூறு பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வாகனப் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஆயிரத்து இருநூறு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பண்டிகைக் காலத்தில் நகரங்களில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் மற்றும் சன நெருக்கம் உள்ள பிரதேசங்களில் பயணிக்கும்போது பணம், ஆபரணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களை வேண்டிக்கொண்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் மதுபானம் அருந்திய நிலையல் வாகனம் ஓட்டுவதனால் அதிகளவான விபத்துகள் சம்பவிப்பதால் அதனைக் குறைக்கும் வகையில் அவ்வாறானவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad