இராணுவ முகாமுக்குள் நிர்வாணமாக புகுந்த - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

24 December, 2017

இராணுவ முகாமுக்குள் நிர்வாணமாக புகுந்த

வவுனியா மூன்று முறிப்பு இராணுவ முகாமுக்கு இன்று அதிகாலை ஆடையின்றி நிர்வாணமாக புகுந்த இளைஞனால் சற்று பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள மூன்றுமுறிப்பு இராணுவ முகாமுக்கு முழு நிர்வாணமாக இளைஞரொருவன் புகுந்துள்ளார்.
இதன்போது குறித்த இளைஞனை இராணுவத்தினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
அத்துடன், இராணுவத்தினர் குறித்த இளைஞனுக்கு உடையணிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
எனினும் குறித்த இளைஞன் என்ன காரணத்திற்காக முகாமுக்குள் உள்நுழைந்தார்? எவ்வாறு நுழைந்தார்? என்ற விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18 வயதுடைய நசீர் என்ற இளைஞனே இவ்வாறு நிர்வாணமாக முகாமுக்குள் நுழைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad