சிவனொளிபாத மலையை தரிசிக்க வந்தவர்கள் கைது.! - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

24 December, 2017

சிவனொளிபாத மலையை தரிசிக்க வந்தவர்கள் கைது.!


சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 10 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்கள் மற்றும் சட்டவிரோத சிகரட் பக்கட்களும் நேற்று மாலை ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் காலி பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்களும், சிகரட் பக்கட்களும் கைப்பற்றப்பட்டன.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று மாலை 15 வாகனங்களை தீடிரென ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர்.
இதன்போது வெவ்வேறு மூன்று வாகனங்களில் பயணித்த 9 பேரிடமிருந்து பதினொராயிரம் மில்லிகிராம் கஞ்சா பக்கட்களும், மற்றும் ஒருவரிடமிருந்து இரண்டு சிகரட் பக்கட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து குறித்த 10 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad