இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் அற்புத மருந்து வெங்காயம்...! - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

06 January, 2018

இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் அற்புத மருந்து வெங்காயம்...!

Image result for இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் அற்புத மருந்து வெங்காயம்...!
வெங்காயம் இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது.
உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்று, சினிமா பாடலில் வேண்டுமானால் வெங்காயத்தை சாதாரணமாக எடை போட்டு இருக்கலாம். ஆனால் அதன் பலன்களோ ஏராளம்… ஏராளம்.
பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயமானாலும், சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயமானாலும் இரண்டுமே அதிஅற்புத மருத்துவ குணம் வாய்ந்தவை. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
சிறுநீர் அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, வெளியே தள்ளிவிடும்.
முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம். வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது.
உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது. வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.
வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.
கல்லீரலில் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம். அடிக்கடி புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
இப்படி எண்ணற்ற பலன்கள் கொண்ட சின்ன வெங்காயத்தின் விலைதான் தலை கிறுகிறுக்க வைக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad