பெரு நாட்டின் பசிபிக் கடற்கரை ஓரத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் 65 பேர் காயமடைந்ததோடு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
அகரி நகரில் இருந்து தென் மேற்காக 40 கிலோமீற்றர் தொலைவில் 36 கீலோமீற்றர் ஆழத்தில் கடந்த ஞாயிறன்று 7.1 ரிக்டர் அளவில் இந்த பூகம்பம் இடம்பெற்றுள்ளது.
இதனால் பல கட்டடங்களும் இடிபாட்டுக்கு உள்ளாகியுள்ளன. தொலைதூர பகுதி ஒன்றே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு வீதிகள் தடைப்பட்டிருப்பதால் உதவிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
யவுகா சிறு நகரில் கல்லொன்று மேலே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூகம்பத்தால் செங்கல் வீடுகள் இடிந்திருப்பதோடு சில பகுதிகளில் மண் சரிவால் வீதிகள் தடைப்பட்டு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருப்பதாக அரேகுபா அளுநர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment