பெண்களுக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வது மிகவும் பிடிக்கும். (lipstick causes cancer healthy tips) அதேபோல் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளும் பெண்களை ஆண்களுக்கும் பிடிக்கும். ஆனால் அது உடலுக்கு நிறைய பிரச்னைகளை உண்டாக்கும்.
பொதுவாகவே லிப்ஸ்டிக் போடுவதைத் தவிர்ப்பதன் மூலம், சிறுநீரகம். கல்லீரல், புற்றுநோய் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில், பொதுவாக லிப்ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் காரியம் தான் புற்றுநோய் உண்டாகக் காரணமாகிறது என்று தெரிய வந்துள்ளது.
லிப்ஸ்டிக்கில் நிறத்துக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருளில் மிக அதிக அளவில் காரியம் உள்ளது. இது ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பை அளவுக்கு அதிகமாகத் தூண்டுகிறது.
இந்த நிறங்கள் வசீகரமான தோற்றத்தைக் கொடுத்தாலும் கூட புற்றுநோய் உண்டாக வழி வகுக்கும்.
லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது, உதடு கருப்பாக மாறினாலோ அல்லது உதட்டின் தோல் உரிந்தாலோ அந்த லிப்ஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment