அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லமான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. வரும் 28 ஆம் திகதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று இன்று தொடங்கியது. இதில் உலகின் 5 ஆம் நிலை வீரரான வீனஸ் வில்லியம்சும், சுவிட்சர்லாந்தின் இளம் வீராங்கனை பெலிண்டா பென்சிக்கும் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் ஆவேசமாக விளையாடினார். இதனால் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது செட்டை கைப்பற்றும் நோக்கில் வீனஸ் வில்லியம்ஸ் போராடினார். ஆனாலும் பென்சிக்கின் நேர்த்தியான ஆட்டத்தினால் வீனஸ் வில்லியம்ஸ் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், இரண்டாவது செட்டையும் பெலிண்டா பென்சிக் 7-5 என்ற கணக்கில் வென்றார்.
இதையடுத்து, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் பெலிண்டா பென்சிக் வென்றார். வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
No comments:
Post a Comment