டிராஃபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர். நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க மனிதர். அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகி கொண்டிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’.
இதில் கதையின் நாயகன் டிராஃபிக்ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். மேலும், ஆர்.கே.சுரேஷ், ரோகினி, உபாஷனா, அம்பிகா, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சேத்தன், பேபி ஷெரின், மோகன் ராம், மதன்பாப் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம்.கெஸ்ட் ரோலில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஜய் விக்ரம் இயக்கி வருகிறார். விஜய் விக்ரம் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். பால முரளி பாலு இசையமைத்து வரும் இதற்கு குகன்.எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்கிறார், பிரபாகர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இதனை ‘கிரீன் சிக்னல் கம்பெனி’ நிறுவனம் சார்பில் ஈரோடு மோகன் என்பவர் தயாரிக்கிறார். தற்போது, இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடியான போலீஸ் கமிஷனராக பிரகாஷ் ராஜ் வலம் வரவுள்ளாராம்.
இது குறித்து பிரகாஷ் ராஜ் பேசுகையில் “வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மைய்யமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் நான் நடிப்பதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment