யாழ் முஸ்லிம் மக்களின் தேவைகளை முன்னெடுக்க உதவத் தயார் - ஹரி ஆனந்தசங்கரி - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

06 January, 2018

யாழ் முஸ்லிம் மக்களின் தேவைகளை முன்னெடுக்க உதவத் தயார் - ஹரி ஆனந்தசங்கரி

யாழ் முஸ்லிம் மக்களின் தேவைகளை முன்னெடுக்க உதவத் தயார் - ஹரி ஆனந்தசங்கரி

பொருளாதார ரீதியாக பின்னடைவுகண்டுள்ள யாழ் முஸ்லிம் மக்களின் தேவைகளை முன்னெடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்க எம்மாலான உதவிகளை மேற்கொள்ள முடியும் என, கனெடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

கனெடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்து, அங்குள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதி மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர். 

இந்த சந்திப்பு யாழ் பெரிய ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. 

இதில், மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஹரி ஆனந்தசங்கரியிடம் எடுத்து கூறப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கருத்து தெரிவித்த ஹரி, மக்களுடைய இன ரீதியான ஐக்கியம் கட்டியெழுப்ப முடியாத சூழல் காணப்படுகின்றது. அவ்வாறான ஒரு நிலைக்கு தமிழ் பேசும் மக்களை விடாக்கூடாது. அதற்கான புதிய வழிகளை கொண்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களின் நிலைமைக்கான ஒரு முடிவாக அமையும். அந்த வகை இவ்வாறான தமிழ் மக்களின் போராட்டத்திற்கு சகல நடவடிக்கையினையும் முன்னேடுக்க நாம் தயார் என்று தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad