கின்னஸ் சாதனையாளருடன் ஜனாதிபதி சந்திப்பு - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

06 January, 2018

கின்னஸ் சாதனையாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

சின்னஞ்சிறு கின்னஸ் சாதனையாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

உலகில் குறைந்த வயதில் புத்தகம் ஒன்றை வௌியிட்டவர் என்ற ரீதியில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவனான தனுவக சேரசிங்கவை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். 

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இச் சிறுவன் தனது பெற்றோருடன் சிசேல்ஸில் வசித்து வருகிறார். 

இவர் "Junk Food" என்ற ஆங்கில நூல் ஒன்றை வௌியிட்டுள்ளதோடு, இதனை எழுத மூன்று நாட்களே செலவிட்டுள்ளார் என்பது விஷேட அம்சமாகும். 

மேலும், இப் புத்தகம் வௌியாகும் போது அவரது வயது 4 வருடங்கள் மற்றும் 356 நாட்களுமாகும். 

இச் சிறுவனின் திறமையை பாராட்டியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நினைவுச் சின்னம் ஒன்றையும், அவரது எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு தனது ஆசிர்வாதங்களையும் வழங்கியுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad