பிலிப்பைன்ஸில் அதிக இயக்கம் கொண்ட எரிமலை ஒன்றில் இருந்து எரிமலை குழம்புகள் கக்கிவரும் நிலையில் அந்த பகுதியை சூழவுள்ள 9,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சாதாரண வெடிப்பு, ஒரு சக்திவாய்ந்த வெடிப்பை ஏற்படுத்தும் அபாயம் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மயோன் எரிமலையில் எச்சரிக்கை அளவை பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் திணைக்களம் மூன்றில் இருந்து ஐந்தாக உயர்த்தியுள்ளது. இது ஒரு அபாயகரமான வெடிப்பொன்றுக்கான வாய்ப்பை அதிகரிப்பதாக உள்ளது.
எரிமலை குழம்புகள் எரிமலை வாயில் இருந்து பள்ளத்தை நோக்கி நேற்று காலை அரை கிலோமீற்றர் தூரம் பாய்ந்துள்ளது. சாம்பல் மேகங்களும் வானை நோக்கி உயர்ந்துள்ளது. ஞாயிறு இரவில் இந்த எரிமலை குழம்பினால் மயோன் மலை உச்சியில் பயங்கர வெளிச்சம் ஏற்பட்டதோடு இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறியுள்ளனர்.
மயோன் எரிமலை பிலிப்பைன்ஸின் வடகிழக்கு மாகாணமான அல்பாயில் அமைந்துள்ளது. இந்த எரிமலை கடந்த 500 ஆண்டுகளில் சுமார் 50 தடவைகள் வெடித்துள்ளது.
No comments:
Post a Comment