மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விபரத்தை இன்று பிற்பகல் 2 மணி வரை சி.பி.ஐ. நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் நேற்றுமுன்தினம் தண்டனை விவரங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக லாலு பிரசாத், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனால் தண்டனை விவரத்தை உடனே வெளியிடுவார் என அனைவரும் காத்திருந்தனர். ஆனால், தண்டனை அறிவிப்பை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில், லாலுவுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனை விபரம் தொடர்பாக அரசுதரப்பு சட்டத்தரணியும் லாலுவின் சட்டத்தரணியும் நேற்று நீதிபதியின் முன்னர் வாதிட்டனர். அப்போது சிறையில் உள்ள லாலு பிரசாத் யாதவ், வீடியோ கொன்பரன்சிங் மூலம் விசாரணையில் ஆஜரானார்.
இந்த வாதம் நேற்று மாலை முடிவடைந்த நிலையில் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விபரத்தை இன்று பிற்பகல் 2 மணிக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. லாலு பிரசாத் யாதவ் உட்பட இவ்வழக்கில் தொடர்புடைய குற்றாவாளிகளுக்கான தண்டனை விபரம் இன்று பிற்பகல் 2 மணியளவில் வீடியோ கொன்பிரன்சிங் முறையில் அறிவிக்கப்படும் என லாலுவின் சட்டத்தரணி சித்ரஞ்சன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment