அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் சார்பில் 87 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை சார்பாக கலந்துகொள்ளவுள்ள வீரர்ள் பத்து வகையான விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் விசேட குழுவின் மூலம் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மெய்வாண்மை தெரிவுப் போட்டிகள் அடுத்த மாத பிற்பகுதியில் கொழும்பு சுகதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment