விஜய் சேதுபதிக்கு சினிமா வட்டாரங்கள் மத்தியில் நல்ல நம்பிக்கை இருக்கிறது. அவரின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடந்தது. இதில் சிறந்த படமாக விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு தேர்வானது.
அதோடு விஜய் சேதுபது நடித்து நல்ல வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா இரண்டாவது சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் மாநகரம் படத்திற்கு சிறப்பு ஜூரி விருது கிடைத்தது.
அதோடு விஜய் சேதுபதிக்கு அமிதாப்பச்சன் யூத் ஐக்கான் விருது கொடுக்கப்பட்டது. அதோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் கொடுக்கப்பட்டது. இதை அவர் உடனேயே இந்தோ சினி அப்ரிஷியேசன்ஸ் அமைப்புக்கே நன்கொடையாக கொடுத்துவிட்டார்.
இந்த அமைப்பு திரைப்படங்களுங்கான விழாவை வருடந்தோறும் நடத்தி வருகிறது.

No comments:
Post a Comment