சிம்புவுக்கு அவங்க அப்பா இதை தான் சொல்லிக்கொடுத்திருக்கிறார் போல! பிரபல தயாரிப்பாளர் அதிரடி - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

24 December, 2017

சிம்புவுக்கு அவங்க அப்பா இதை தான் சொல்லிக்கொடுத்திருக்கிறார் போல! பிரபல தயாரிப்பாளர் அதிரடி


Related image

சமீபகாலமாகவே நடிகர் சிம்பு மீது சிலர் அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறார்கள். சில நாட்களுக்கு முன் கூட சிம்பு நடித்த AAA படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் பொது மேடையில் சிம்புவால் தனக்கு ரூ 18 கோடி நஷ்டம் என ஓப்பனாக கூறினார். இது பெரிய விசயமாக மாறியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் இது குறித்து பேசியுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினராக அவர் போட்டியிடுகிறார்.
இதில் பேசிய அவர், என்னை எதிர்த்து போட்டியிடும் அருள்நிதிக்கு ஆதரவாக சிலர் பேசினார்கள். அதில் பேசிய டி.ஆர் தன் மகனுக்கு நடிக்க மட்டும் சொல்லிக்கொடுக்கவில்லை.
இயக்கம், பாடல் எழுதுதல், இசையமைப்பு, நடனம் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்திருக்கிறேன் என கூறினார். ஏன் அவர் படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வரவேண்டும் என மகனுக்கு சொல்லிக்கொடுக்கவில்லையா.
அதனால் தான் சிம்பு பல தயாரிப்பாளர்களை தவிக்க விடுகிறார் என மைக்கேல் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad