யாழ்ப்பாணம் முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது.
வித்தியாலய பிரதான மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 2000ஆம் ஆண்டிலிலிருந்து செயற்பட்டுவரும் பாடசாலை மாணவர்களுக்காக பெரும் பணியாற்றி வரும் 'பவுன்டேஷன் ஒப் குட்னஸ்' அமைப்பின் குசில் குணசேகரவின் அனுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி வழிகாட்டலில் 51ஆவது படைப்பிரிவின் கண்காணிப்பின்கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யுhழ்ப்பாணம் முத்துத்தம்பி வித்தியாலயத்தில் தரம் 1இலிருந்து உயர்தரம் கல்வி பயிலும் 490 மாணவர்களுக்கும் , கோண்டாவிலுள்ள பரமஜோதி வித்யாலயாத்தில் 234 மாணவர்களுக்கும் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அறக்கட்டளை முகாமையாளர் திரு ஆனந்த ஜெயவர்த்தன, யாழ் கல்வி வலய பணிப்பாளர் என். தேவராஜா, 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன, அதிபர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment