கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரட்டுக்கள், மதுபானம், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் பொதுமக்கள் முன்னிலையில் முற்றாக அழிப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியன கடந்த வருடத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மொத்தமாக 37 தசம் ஐந்து ஐந்து பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின், கஞ்சா போதைப் பொருட்கள், சட்டவிரோத சிகரட்டுக்கள் மற்றும் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த வருடத்தில் இத்தகைய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment