இராஜகிரிய மேம்பாலம் சுற்றறிக்கைக்கு அமைவாகவே திறக்கப்பட வேண்டும்! - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

06 January, 2018

இராஜகிரிய மேம்பாலம் சுற்றறிக்கைக்கு அமைவாகவே திறக்கப்பட வேண்டும்!

Image result for இராஜகிரிய மேம்பாலம்

இராஜகிரியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ள, சுற்றறிக்கைக்கு அமைவாகவே திறக்கப்பட வேண்டும் என, ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அந்த நிறுவனத்தின் தேர்தல்கள் கண்காணிப்புப் பிரிவினரால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதிக்கு முன்னர் குறித்த பாலம் திறக்கப்படுமாயின், அதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அரசியல்வாதிகள் எவரும் கலந்து கொள்ளக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனல் நிறுவனத்தின் தேர்தல்கள் கண்காணிப்புப் பிரிவி சுட்டிக்காட்டியுள்ளது. 

இதேவேளை, தேர்தல்கள் சட்டத்தை மீறும் வகையில் பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் பதிவாகினால், அது குறித்து ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனல் நிறுவனத்தின் 071 135 0 990 என்ற இலக்கத்திற்கு அல்லது pppr@tisrilanka.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துமாறும் அந்த நிறுவனம் கோரியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad