ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தாரா கோனோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.
பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்த ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க வரவேற்றார்.
ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஒருவர் 15 வருடங்களுக்கு பின்னர் இலங்கை விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

No comments:
Post a Comment