சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்படும் அனைத்து போஸ்ட்டர்கள், பெனர்கள், கட்அவுட்டுக்கள் உடனடியாக நீக்கப்படும் - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

05 January, 2018

சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்படும் அனைத்து போஸ்ட்டர்கள், பெனர்கள், கட்அவுட்டுக்கள் உடனடியாக நீக்கப்படும்

சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்படும் அனைத்து போஸ்ட்டர்கள், பெனர்கள், கட்அவுட்டுக்கள் உடனடியாக நீக்கப்படும்
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போஸ்ட்டர், பெனர், கட்அவுட் போன்றவற்றை தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போதுமட்டும் காட்சிப்படுத்தலாம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு இதுவிடயம் தொடர்பில் அறிவூட்டும் நோக்கில் இந்த அறிவித்தலை இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வெளியிட்டார்.

சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்படும் போஸ்ட்டர், பெனர் மற்றும் கட்அவுட்டுக்களை அப்புறப்படுத்துவதுவதைத் தவிர, வேறு மாற்றுத் தீர்வுகள் இல்லை என்று மஹிந்த தேசப்பிரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவிடயம் தொடர்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து விபரங்களை கையளிக்க வேண்டும் . அவ்வாறு சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் அரசியல் அலுவலகங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad